Skip to main content

பட்டாம்பூச்சிக் கதைகள்

 


என் தேவை, என் வாழ்வு என்று எல்லாம் தனியாகிப் போனதில் வருத்தமேதும் இல்லை என்றாலும், சற்றுநேரம் சலனமற்று இருக்கும் போதெல்லாம், உன் நினைவென்னும் குளத்தை சுற்றியே நடந்திருக்கிறேன் ஒரு துறவியைப் போல. 

வண்ணத்துபூச்சியின் சிறகைப் போன்றவள் நீ.. 

நான் பூக்களை திறந்து வைத்திருக்கும் காட்டைப் போன்றவன். 

பறத்தலும் இருத்தலும் உன் விருப்பம் சார்ந்தது. 


18:09:2015 

பட்டாம்பூச்சிக் கதைகள்

Comments

Popular posts from this blog

பட்டாம்பூச்சிக் கதைகள்

கடவுளும் அவளும் கல் ஆனதால் காதலும் நானும்  பட்டாம்பூச்சி ஆகிறோம்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் . சைப்ரஸ் மரங்களின் மூச்சென மலைகளிலிருந்து எழும்பி பள்ளத்தாக்கினை இசையால் நிறைத்துச் செல்கிறது ஆன்மாவின் காதல். நீலகிரி மலை சிகரங்களில் இயற்கையின் மொழியாய் வியாபித்திருக்கிறது அவளின் மௌனம். காட்டின் அடர்ந்த தனிமையிலிருந்து வெளியேறி சிகரங்களைத் தழுவிச் செல்கிறது ஒரு பறவையின் பாடல் வண்ணத்துப்பூச்சியின் சிறகில் எழுதிய கவிதையாக மாறி காற்றில் தொற்றிக் கொள்கிறது அவளின் தெய்வீகம்.