Skip to main content

Posts

Showing posts from August, 2009

பட்டாம்பூச்சிக் கதைகள்

ஈக்களிடமிருந்து தேனைத் திருடுவது போல் உன்னிடமிருந்து கவிதைகளைத் திருடுகிறேன் "அடேய் திருட்டுப்பயலே" என்று ஒற்றை வாக்கிய அணிந்துரை எழுது அது போதும் நாளைக்கே புத்தகம் போட்டுவிடுவேன்..!

பட்டாம்பூச்சிக் கதைகள்

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் ஊருக்குள் வருவதும் போவதுமாய் இருக்கிறது   புகைவண்டி. பால்யங்களில் என் அம்மா எனக்கு ஊட்டியது ரயில் சோறு தான். ஊட்டி ரெயில் என்று சொல்வார்களே..! -  "சோறூட்டி ஓடும் ரெயில்" இப்போதும் எங்கள் ஊரில் எல்லா குழந்தைகளுக்கும் இந்த புகைவண்டியைக் காட்டித்தான் சோறு ஊட்டுகிறார்கள். 15 வயது வரை இந்த ரயிலை கையசைத்து வழியனுப்பி இருக்கிறேன்.  ஒவ்வொரு முறையும் குறைந்தது முப்பது கைகளையாவது பதிலுக்கு அசைக்காமல் கடந்ததில்லை இந்த புகைவண்டி. அன்றாடம் எங்கள் குழந்தைகளை மகிழ்விக்கும் பொம்மையாக வந்து போகும் இந்த புகைவண்டியை, விஞ்ஞானக்கண் கொண்டு கண்டதில்லை இதுவரையில். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட குதுகலமாய் கையசைக்கும் ஒரு குழ்ந்தையாய் என்னை மாற்றிவிட்டுப் போன இந்த புகைவண்டி "ஆய்ய்.. ட்ரைன்நு" என்று அப்போது என்னை உள்ளுக்குள் சொல்ல வைத்ததில் வியப்பொன்றும் இல்லை. தினந்தோறும் ஊருக்குள் வந்து போகும் பால்காரனைப் போல இயல்பாய் வருவதும் போவதுமாய் இருக்கிறது இந்த தீவண்டி. எப்போதும் தாமதமாகவே வரும் ஒன்றாம் வகுப்பு கண்ணாடி வாத்தியாருக்கும், காலை பத்து மணிக்...

பட்டாம்பூச்சிக் கதைகள்

நீங்கள் எப்போது ஒரு திரைப்படம் இயக்கப்போகிறீர்கள்? நண்பர்கள் அடிக்கடி என்னிடம் கேட்கின்ற கேள்வி இது.  " நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது". இது அனைவருக்குமான என் பதில். ஒரு திரைப்படத்தை இயக்க நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதா?  உண்மையில் என் பதில் போலியானது. எனக்கு ஒரு திரைப்படத்தை இயக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் அது இப்போதைக்கு அவசியமற்றதாக தோன்றுகிறது. சிலசமயங்களில் நான் அதீதமான வெறுமையை உணர்கிறேன். அந்த வெறுமை என்னை ஒரு பள்ளத்தாக்கை நிறைக்கிற அமைதியாக்குகிறது.  எனக்கு தெரிந்ததெல்லாம், ஒரு மலையும் பள்ளத்தாக்கும் மட்டும் தான்.  பள்ளத்தாக்கின் குழந்தை நான் மலையை வியக்கிறேன்.  ஒரு போதும் நான் மலை உச்சியை சென்று பார்க்கப்போவதில்லை.  என் இலக்கெல்லாம் என்னை நிறைக்கிற அந்த வெறுமையை சரியாக உணர்வதும் அதை உணர்த்துவதும் தான்.  அதற்குரிய திரைமொழியை நான் இயற்கையிடம் யாசிக்கிறேன்.  நான் ஒரு காட்டுவாசி. என் பள்ளத்தாக்கின் மீது உயர்ந்து நிற்கின்ற அந்த மலை தன்னிடமிருக்கிற காட்டை ...

பட்டாம்பூச்சிக் கதைகள்

பழகிப்பார் தெரியும் என் பட்டாம்பூச்சி பற்றி அதன் பின் இருட்டிலும் தேடுவாய் நீ அறிந்த வண்ணத்தையும் நான் உணர்ந்த வாசத்தையும்

பட்டாம்பூச்சிக் கதைகள்

"கொடைக்கானலுக்கு நான்கு முறை சென்றிருக்கிறேன். ஒருமுறை தற்கொலை செய்வதற்கு சென்ற கொடைக்கானலை கொஞ்சம் அதிகமாக நினைவில் வைத்திருக்கிறேன் கொடைக்கானலை தவிர வேறெங்காவது நான் தேர்ந்திருந்தால் அந்த தற்கொலை நிகழ்ந்திருக்கலாம். இரவெல்லாம் அந்த சாலையில் இருந்து ஏரியை பார்த்துக்கொண்டிருந்தேன். அன்று இரவு அந்த ஏரி என் குழப்பமான மனதின் அலைகளை வாங்கி ஒரு ஆழ்ந்த ரகசியமென தனக்குள் புதைத்திருக்கலாம். தாகம் தணிக்க வரும் பறவை ஒன்று என் இரகசியங்களைக் குடித்திருக்கலாம்.  கடைசியாக சிகரெட் வாங்கிய கடையில் இருந்த கிழவனுக்கு என் மேல் எழுந்த சந்தேகத்தை, மேகங்களை போர்த்திக்கொண்டு கதகதப்பாய் உறங்கிய நிலா ஒரு கனவென உணர்ந்திருக்கலாம். அந்த இடமெங்கும் என்னை நோக்கி கைகளை அசைத்துகொண்டிருந்த மரங்கள் அமைதியாக பாடியது என் அம்மாவின் பிரார்த்தனையாகவும் இருக்கலாம். என்னை அதட்டி பேருந்து நிலையத்திற்கு விரட்டிய காவல்காரனின் குரல், என் தந்தையின் கவலையாகவும் இருக்கலாம். அன்றிரவு எனக்குள் பிறந்த தெளிவு கடவுளின் கருணையாக இருக்கலாம். என் பிறந்த பூமியின் தொடர்ச்சிதானே அந்த மலைச்சிகரங்கள்.. ஒருவேளை சிகரங்கள் அந்த பள...

பட்டாம்பூச்சிக் கதைகள்

வாழ்வின் அவசரம் முகத்திலறைய முதுகில் அறையும் வெயிலின் கரங்களை சபித்துக்கொண்டே நடந்தேன் மாநகர வீதியில் நகரத்தெருக்களில் நடந்து களைப்புற்று ஒதுங்கினேன் பயணிகள் நிழற்குடையில் "மச்சான்" என்ற குரலில் அதிர்ந்து நிமிர்ந்தேன் கல்லூரி வாழ்வில் பழகிப்பிரிந்த குட்டிசுவர்வாசிகளில் ஒருவன் எப்பிடிடா இருக்க உன் ஆளு எப்படி இருக்கா என்ன பண்ற நீ எங்க இருக்க..... அவன் கேட்டுக்கொண்டே இருக்கையில் பதில்களேதுமற்ற நான் மீண்டும் ஒரு உபயோகமற்ற பொழுதில் உன்னை சந்திக்கிறேன் என்று எதிரில் வந்த பேருந்தில் அவசரமாய் ஏறித் தொலைத்தேன் அவன் நட்பை...

பட்டாம்பூச்சிக் கதைகள்

ஈரப்படுத்தப்பட்ட கனவின் வெள்ளை துணிக்குள் கொஞ்சம் விதைகளை வைத்திருக்கிறேன் நடவின் பாடல்களைப்பாடிக்கொண்டு அறுவடை நாட்களை கனவு காண்கிறேன் நிலம் இறுகி பாறையாகிக்கொண்டிருக்கிறது..

பட்டாம்பூச்சிக் கதைகள்

ஒவ்வொரு முறையும் என்னை சந்திக்கிறீர்கள் உங்கள் முன் முடிவுகளோடு எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமலே எல்லாவற்றையும் மறைத்து விடுகிறேன் உங்களிடமிருந்து.

பட்டாம்பூச்சிக் கதைகள்

வெயிலும் வேர்வையில் நாறிய உடலும் கசங்கிய உடைகளும் கலங்கிய விழிகளுமாய் பசியோடு பெருநகர வீதிகளில் வேலைதேடும் யாவருக்கும் வாய்த்து விடுவதில்லை பெட்ரோல் நிரப்பிய வாகனமும், புகைப்பிடிக்க தேநீர் பருகவென சில்லறை தந்துதவும் நண்பர்கள்.. தேடித் தெருவில் எதையோ தின்று சுதந்திரமாய் பெருவழிகளில் அலையும் தெரு நாய்களுக்கிருக்கும் மரியாதை கூட எனக்கிருக்கப் போவதில்லை ஒரு நல்ல வேலைகிடைக்கும் வரை. தன் மீது விழும் தூய மழைநீரை பற்றிய கவலைகள் ஏதுமற்று தேங்கிக்கிடக்கும் கூவமென கனவுகள். பெருநகர வீதிகளில் ஓடும் மழைவெள்ளம் போலாகும் மனசு நகரத்தெருக்களில் சோற்றுக்க்காகவென ஓடும் அவசரம் வீதிகளுக்கடியில் ஓடிகொண்டிருக்கும் சாக்கடைஎன உள்ளுக்குள் நாறிக்கொண்டிருக்கிறது வாழ்வு நகரமாகும் மனசின் ஞாபகத் தெருக்களில் கேட்ப்பாரற்றுக் கிடக்கிறது புத்தகப் பையோடு கொஞ்சம் புகழையும் சுமந்த என் இறந்தகாலம்...

பட்டாம்பூச்சிக் கதைகள்

தேயிலை மரங்கள் செடிகளாய் கவாத்து செய்யப்பட்ட பச்சைப்பள்ளத்தாக்கு கருங்கல்லின் மேல் செம்மண் குழைத்து தேய்த்து சுண்ணாம்பு பூசிய வீடு. மூடுபனியின் குளிர்ந்த கரங்களின் தழுவலில் நடுங்கிக்கொண்டிருக்கும் வயோதிகனின் கடைசி மூச்சென கதவிடுக்கில் நுழைகிறது காற்று காலாண்டு பகல்பொழுதை கம்பளிக்குள் திணிக்கிறது குளிர்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

பள்ளத்தாக்கெங்கும் அடர்ந்தமௌனம் அருகிலேங்கோ அத்திமரம் பூத்திருக்கலாம் கிழக்கின்மேகம் கருத்திருந்தது அதிகாலைக்குபின்னும் வெகுநேரம் புல்லை புணர்ந்து கிடந்தது பனி பழத்தோட்டத்தின் சுகந்தம் காற்றில் எறும்புகள் அறிந்திருந்தன மழைக்காலத்தின் ஆரம்பநாள் அதுவென்று எனக்கு நம்பிக்கை இருந்தது நாளை மழைஈசல்களை சந்திப்பேனென்று அதற்குள் நான் அவளை சந்தித்தாக வேண்டும் அந்நேரம் பிரபஞ்சமெங்கும் கைகளை அசைக்கிறாள் நந்தினி எல்லைஇல்லாப் பெருவெளியில் சிறகுகளின்றி பறக்கின்றேன் நான்..

பட்டாம்பூச்சிக் கதைகள்

ஆற்றங்கரையோரம் ஆரஞ்சு மரமாய் வீற்றிருந்தாய் நானும் அங்கேதான் யாரும் விரும்பாத நீர் உறிஞ்சி மரமாய் நின்றிருந்தேன்.. நதிக்கரை பள்ளத்தாக்கெங்கும் பலவண்ண மலர்களாய் மலர்ந்திருந்தாய் நான் அந்த மலையுச்சியில் மரமாய் நின்று என் பழுத்த இலைகளை உனக்குப் பரிசாய் அனுப்பினேன்