Skip to main content

Posts

Showing posts from April, 2017

பட்டாம்பூச்சிக் கதைகள்

தேன்கூட்டுக்குள்  வண்ணத்துப்பூச்சி நெரிசலான  பேருந்துக்குள்  நீ

பட்டாம்பூச்சிக் கதைகள்

அமெரிக்கா போக வேண்டும் உன் ஆசை நீ சொல்ல அலபாட்ரா சிறகு கடன் வாங்கி வானத்தில் தூங்க வேண்டும்  என் ஆசை நான் சொன்னேன். நம்மை நனைக்க தயாரானது மழை. இருவரும் கட்டிக்கொண்டு ஒருவருக்கொருவர் குடையானோம். துணைக்கு ஆளின்றி தனியே நனைந்தது மழை

பட்டாம்பூச்சிக் கதைகள்

பள்ளத்தாக்கெங்கும் அடர்ந்தமௌனம் அருகிலேங்கோ அத்திமரம் பூத்திருக்கலாம் கிழக்கின் மேகம் கருத்திருந்தது அதிகாலைக்கு பின்னும் வெகுநேரம் புல்லை புணர்ந்து கிடந்தது பனி பழத்தோட்டத்தின் சுகந்தம் காற்றில் எறும்புகள் அறிந்திருந்தன மழைக்காலத்தின் ஆரம்பநாள் அதுவென்று எனக்கு நம்பிக்கை இருந்தது நாளை மழை ஈசல்களை சந்திப்பேனென்று அதற்குள் நான் அவளை சந்தித்தாக வேண்டும் அந்நேரம் பிரபஞ்சமெங்கும் கைகளை அசைக்கிறாள் நந்தினி எல்லைஇல்லாப் பெருவெளியில் சிறகுகளின்றி பறக்கிறேன் நான்

பட்டாம்பூச்சிக் கதைகள்

நீ அருகிலிருக்க நமெக்கென வாய்க்கும் தனிமை வரம். நெரிசலுக்குள்  சிக்கிக்கொண்டு  மூச்சிழுக்கத் திணறும்  என் காதலை  பத்திரப்படுத்துகிறேன். இந்தப்பிறவி தவமிருத்தலில்  தொலைந்து போகக்கூடும். வரமளிக்கும் தேவதையோ வரம்புகளுக்குள்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

மீண்டும் அந்த நிறுத்தத்தில் நானும்.. நிற்காமல் கடந்த பேருந்தில் நீயுமாக.. உன்னைச் சந்தித்த முதல் காலை திரும்புமா என்று.. கனவுகளைக் கிளறியவாறே அன்றாடம் கிழக்கில் எழுகிறது பத்தொன்பது ஆண்டுகளைத் தின்று தீர்த்த காதல்..