Skip to main content

பட்டாம்பூச்சிக் கதைகள்


பள்ளத்தாக்கெங்கும்
அடர்ந்தமௌனம்
அருகிலேங்கோ
அத்திமரம் பூத்திருக்கலாம்
கிழக்கின்மேகம் கருத்திருந்தது
அதிகாலைக்குபின்னும்
வெகுநேரம்
புல்லை புணர்ந்து கிடந்தது பனி
பழத்தோட்டத்தின் சுகந்தம் காற்றில்
எறும்புகள் அறிந்திருந்தன
மழைக்காலத்தின்
ஆரம்பநாள் அதுவென்று
எனக்கு நம்பிக்கை இருந்தது
நாளை மழைஈசல்களை சந்திப்பேனென்று
அதற்குள்
நான் அவளை
சந்தித்தாக வேண்டும்
அந்நேரம்
பிரபஞ்சமெங்கும்
கைகளை அசைக்கிறாள் நந்தினி
எல்லைஇல்லாப் பெருவெளியில்
சிறகுகளின்றி பறக்கின்றேன் நான்..

Comments

  1. நந்தினி என்பது பிந்தைய திருத்தல் குறிப்பு 📓💌📒. முந்தைய நாற்பதிலும் பிந்தைய நாற்பதிலும், எந்தையின், தந்தையின் சந்தையில் கூட இதை திருத்த இயலாது. மானுட மா இது மந்தை க்கு மந்திரி யார்??

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பட்டாம்பூச்சிக் கதைகள்

மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் . சைப்ரஸ் மரங்களின் மூச்சென மலைகளிலிருந்து எழும்பி பள்ளத்தாக்கினை இசையால் நிறைத்துச் செல்கிறது ஆன்மாவின் காதல். நீலகிரி மலை சிகரங்களில் இயற்கையின் மொழியாய் வியாபித்திருக்கிறது அவளின் மௌனம். காட்டின் அடர்ந்த தனிமையிலிருந்து வெளியேறி சிகரங்களைத் தழுவிச் செல்கிறது ஒரு பறவையின் பாடல் வண்ணத்துப்பூச்சியின் சிறகில் எழுதிய கவிதையாக மாறி காற்றில் தொற்றிக் கொள்கிறது அவளின் தெய்வீகம்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

கடவுளும் அவளும் கல் ஆனதால் காதலும் நானும்  பட்டாம்பூச்சி ஆகிறோம்.